Sunday, August 18, 2013

ஒரு போராளி இரு போராட்டத்தை


ஒரு போராளி இரு போராட்டத்தை எதிர்கொண்டான்
காந்தியவாசிகளின் அஹிம்சா பற்றையும் வெள்ளையினத்தின்
அடிமையாக்கும் அடிமை பற்றையும் !!!!!

சொந்தநாட்டிலே இரு துருவங்களை கையாண்ட
பெருமைக்குரியவன் !!!!

ஜான்சி ராணி இயக்கத்தை உருவாக்கி பெண்ணின போராளிகளை
உருவாக்கிய முதல் தலைவன் இவன் !!!!

ஆத்திரக்காரர் என்று சொன்ன அஹிம்சைக்கும், பதற்றகாரர்
என்று சொன்ன முதல் பாரத பிரதமருக்கும் தான் ஒரு
போராட்ட சரித்திரத்தை தோற்றுவிக்கும் பாத்திரக்காரர்
என்பதை நிருபித்தவர் !!!!

ஹிட்லர் போன்றவன் இந்தியாவில் நுழைந்திருந்தால்
காற்றில் பறந்திருக்கும் காந்திய கொள்கை !!!!

இன்றுவரை இந்தியாவின் மனம் குன்றிய வீழ்ச்சிக்கு இந்த
திணிக்கப்பட்ட அஹிம்சைதான் காரணம் !!!!!

அஹிம்சையை பின்பற்றும் நாட்டில் எதற்கு இன்றுவரை லத்தியேந்திய
காவலர்கள் -மாடு மேய்பவர்கள் போல

இந்தியா அஹிம்சை நாடு என்பதை விடவும் , தர்மத்திற்காய் எதையும்
செய்திடும் நாடு என்பதில்தான் பெருமிதம் அடங்கியுள்ளது -அதனை
நிரூபிக்க போரடிய மகத்தான வீரன் !!!!

தர்ம போராட்டத்தில் வெற்றியடைய ரத்தம் சிந்துவது என்று
முடிவெடுத்துவிட்டால் முதலில் சிந்துவது எதிரியின்
ரத்தமாக இருக்கட்டும் -இதுதான் சுபாஷின் மூச்சுகாற்றில்
வெளிவந்த புரட்சி முழக்கம் !!!!

அதர்மத்தை அடிபணியவைக்க அஹிம்சை ஒருபக்கமும்
ஆயுதம் மறுபக்கமும் அணிவகுத்து அவனியிலே
சுதந்திர இந்தியா தலைநிமிரட்டும் -என்றவனின்
சிந்தனை இன்னும் பலமாக பலரின் நெஞ்சத்தில்
சூடான ரதத்தை சுழற்றியவாறு இயங்கி கொண்டுதானிருக்கிறது !!!!!

போராளியின் வாழ்கையில் மரணம் மண்டியிட்டு பின் தொடரும் !!!!
ஆனால் அஹிம்சை ஏந்தியும் அதே சமயம் ஆயுதம்
ஏந்தியும் போராடும் இவன் போன்ற போராளிக்கு முன்னால்
மரணமும் குழப்பதொடு தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் !!!!

அப்படி, மரணத்தால் தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்த
ஒரே வீரன் சந்திரனை ஒரு நாசியிலும் சூரியனை மறு நாசியிலும்
சுவாசித்த சுபாஷ் சந்திர போஸ் எனும் தீரன் !!!!

இந்த போராளியின் வெற்றிச்சலனம் இன்னும் இந்திய
தாயின் கர்ப்பத்தில் - தான் ஜனிக்க போகும் நாட்களை எண்ணியவாறு
வளர்ந்து வருகிறது !!!!

ஜனித்திடும் நாளில் எனது இந்தியாவிடம் அவசியமான ஆவேசமும்
அடிமைதனமற்ற அஹிம்சையும் அடுத்தடுத்த பக்கத்தில்
அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் !!!!

மாபெரும் போராளியை இந்தியா நியாபகத்தில் கொள்ளாத வரை - அடிமைத்தனமும் அநீதிகளும் ,அடுத்தவனின் நாட்டில்
கையேந்தும் ஈனமும் இம்மண்ணில் ஓயாது,தலை சாயாது !!!!!

இறுதிகட்ட உரையென்று இவனுக்கில்லை ,காரணம் இறுதிவரை இவன் எங்கிருந்தான் இறந்தானா அல்லது இருந்தானா இன்றுவரை தனதிறப்பை சர்ச்சையில் வைத்திருக்கும் சாகாகலை அறிந்த
சரித்திர நாயகன் !!!

//நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவானில், ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட தினம் இன்று.//
ஒரு போராளி இரு போராட்டத்தை எதிர்கொண்டான் காந்தியவாசிகளின் அஹிம்சா பற்றையும் வெள்ளையினத்தின் அடிமையாக்கும் அடிமை பற்றையும் !!!!! சொந்தநாட்டிலே இரு துருவங்களை கையாண்ட பெருமைக்குரியவன் !!!! ஜான்சி ராணி இயக்கத்தை உருவாக்கி பெண்ணின போராளிகளை உருவாக்கிய முதல் தலைவன் இவன் !!!! ஆத்திரக்காரர் என்று சொன்ன அஹிம்சைக்கும், பதற்றகாரர் என்று சொன்ன முதல் பாரத பிரதமருக்கும் தான் ஒரு போராட்ட சரித்திரத்தை தோற்றுவிக்கும் பாத்திரக்காரர் என்பதை நிருபித்தவர் !!!! ஹிட்லர் போன்றவன் இந்தியாவில் நுழைந்திருந்தால் காற்றில் பறந்திருக்கும் காந்திய கொள்கை !!!! இன்றுவரை இந்தியாவின் மனம் குன்றிய வீழ்ச்சிக்கு இந்த திணிக்கப்பட்ட அஹிம்சைதான் காரணம் !!!!! அஹிம்சையை பின்பற்றும் நாட்டில் எதற்கு இன்றுவரை லத்தியேந்திய காவலர்கள் -மாடு மேய்பவர்கள் போல இந்தியா அஹிம்சை நாடு என்பதை விடவும் , தர்மத்திற்காய் எதையும் செய்திடும் நாடு என்பதில்தான் பெருமிதம் அடங்கியுள்ளது -அதனை நிரூபிக்க போரடிய மகத்தான வீரன் !!!! தர்ம போராட்டத்தில் வெற்றியடைய ரத்தம் சிந்துவது என்று முடிவெடுத்துவிட்டால் முதலில் சிந்துவது எதிரியின் ரத்தமாக இருக்கட்டும் -இதுதான் சுபாஷின் மூச்சுகாற்றில் வெளிவந்த புரட்சி முழக்கம் !!!! அதர்மத்தை அடிபணியவைக்க அஹிம்சை ஒருபக்கமும் ஆயுதம் மறுபக்கமும் அணிவகுத்து அவனியிலே சுதந்திர இந்தியா தலைநிமிரட்டும் -என்றவனின் சிந்தனை இன்னும் பலமாக பலரின் நெஞ்சத்தில் சூடான ரதத்தை சுழற்றியவாறு இயங்கி கொண்டுதானிருக்கிறது !!!!! போராளியின் வாழ்கையில் மரணம் மண்டியிட்டு பின் தொடரும் !!!! ஆனால் அஹிம்சை ஏந்தியும் அதே சமயம் ஆயுதம் ஏந்தியும் போராடும் இவன் போன்ற போராளிக்கு முன்னால் மரணமும் குழப்பதொடு தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் !!!! அப்படி, மரணத்தால் தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்த ஒரே வீரன் சந்திரனை ஒரு நாசியிலும் சூரியனை மறு நாசியிலும் சுவாசித்த சுபாஷ் சந்திர போஸ் எனும் தீரன் !!!! இந்த போராளியின் வெற்றிச்சலனம் இன்னும் இந்திய தாயின் கர்ப்பத்தில் - தான் ஜனிக்க போகும் நாட்களை எண்ணியவாறு வளர்ந்து வருகிறது !!!! ஜனித்திடும் நாளில் எனது இந்தியாவிடம் அவசியமான ஆவேசமும் அடிமைதனமற்ற அஹிம்சையும் அடுத்தடுத்த பக்கத்தில் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் !!!! மாபெரும் போராளியை இந்தியா நியாபகத்தில் கொள்ளாத வரை - அடிமைத்தனமும் அநீதிகளும் ,அடுத்தவனின் நாட்டில் கையேந்தும் ஈனமும் இம்மண்ணில் ஓயாது,தலை சாயாது !!!!! இறுதிகட்ட உரையென்று இவனுக்கில்லை ,காரணம் இறுதிவரை இவன் எங்கிருந்தான் இறந்தானா அல்லது இருந்தானா இன்றுவரை தனதிறப்பை சர்ச்சையில் வைத்திருக்கும் சாகாகலை அறிந்த சரித்திர நாயகன் !!! //நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவானில், ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட தினம் இன்று.//

சே குவேராவின்- பிடல் காஸ்ட்ரோ


சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசுவது:

இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள். ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தெரியாது அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களின் ஒன்று தான் அந்த செயல்வீரனின் முகம் ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம் கொள்ளவில்லை. உயர் நடத்தைக் கொண்ட ஒரு மனிதனை நாம் இழந்து நிற்கிறோம். இறக்கும்போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம். இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால் துயரம் கொள்கிறோம்.

துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. மோதலின்போது படுகாயம் அடைந்த பின்பு அவரைக் கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர். கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக் கைதியை சுட்டுக் கொல்ல ஒரு கூலிப் பட்டாளத்திற்கு பொறுக்கிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. சேவின் வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும் அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக் கூட அவர்கள் விட்டு அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகள் அழித்து விட முடியாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்து விட்டார். இப்பூவுலகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காவும் ஏழைகளுக்காகவும் இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக் கொள்வார்கள் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள். அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை பின்பற்றுவார்கள். இந்தக் கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.

அவரது புதிய எழுத்துக்களை நாம் மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க முடியாதுதான். ஆனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச் சென்றுள்ளார்.

நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் வருங்காலத்தைச் சார்ந்து மனிதனின் முன் மாதிரி வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதனின் சே என்று என் இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன்

-- பிடல் காஸ்ட்ரோ
சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசுவது: இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள். ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தெரியாது அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களின் ஒன்று தான் அந்த செயல்வீரனின் முகம் ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம் கொள்ளவில்லை. உயர் நடத்தைக் கொண்ட ஒரு மனிதனை நாம் இழந்து நிற்கிறோம். இறக்கும்போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம். இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால் துயரம் கொள்கிறோம். துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. மோதலின்போது படுகாயம் அடைந்த பின்பு அவரைக் கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர். கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக் கைதியை சுட்டுக் கொல்ல ஒரு கூலிப் பட்டாளத்திற்கு பொறுக்கிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. சேவின் வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும் அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக் கூட அவர்கள் விட்டு அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகள் அழித்து விட முடியாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்து விட்டார். இப்பூவுலகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காவும் ஏழைகளுக்காகவும் இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக் கொள்வார்கள் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள். அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை பின்பற்றுவார்கள். இந்தக் கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த பின்னடைவிலிருந்து மீண்டு எழும். அவரது புதிய எழுத்துக்களை நாம் மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க முடியாதுதான். ஆனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச் சென்றுள்ளார். நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் வருங்காலத்தைச் சார்ந்து மனிதனின் முன் மாதிரி வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதனின் சே என்று என் இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன் -- பிடல் காஸ்ட்ரோ

உலகில் தமிழர்கள் வாழும்

தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு
---------------------------------------------------------------------------------------
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உலக அரங்கில் தைரியமாக உண்மையை உரக்க பேசியுள்ளார் சிங்கப்பூரின் முன்னால் பிரதமர் லீ குவான் யூ. அவருக்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நாளை காலை 11மணிக்கு தி.நகரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் சென்னை மாணவர்கள் மலர்கொத்து கொடுக்க உள்ளோம்.

இதேபோல உலகில் தமிழர்கள் வாழும் எல்லா நாட்டிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்திலும் லீ க்வானுக்கு நன்றி தெரிவிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

"இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது" என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், நவீன சிங்கப்பூரின் சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.

லீ குவான் யூ உடனான உரையாடல்கள் (‘Citizen Singapore: How To Build A Nation - Conversations with ’) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில்தான் இவ்வாறு ராஜபக்ச மற்றும் சிங்கள இனவாதம் குறித்து கூறியுள்ளார் லீ.

அதில் சில பகுதிகள்...
இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.

தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.
இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.
நூலாசிரியர் கேட்ட சில கேள்விகளுக்கு லீ அளித்துள்ள பதில்கள்...

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ.

இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத சுமை என்று ஒரு நாள் மலேசியா, சிங்கப்பூரை தனியாக கழற்றி விட்டது. அப்போது நிலை குலைந்து போனார்கள் சிங்கப்பூர் மக்கள். ஆனால் அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்கப்பூரை இன்று உலக நாடுகளே வியக்கும் வண்ணம் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ க்வான் யூ என்பது குறிப்பிடத்தக்கது