About Tamil leader...
ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற "பொங்குதமிழ் 2012"
நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது.
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன், தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது.
பின்னர் அகவணக்கம் இடம்பெற்று ஈகைப்பேரொளிகளுக்கான ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொங்குதமிழ் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நிகழ்வில் பிரான்சு இனியம் நடனக்குழுவினரின் கலாச்சார நடனம் மற்றும் பொங்குதமிழ் எழுச்சி நடனங்களுடன் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழரல்லாத வேற்றினப் பிரதிநிதிகளும் சிறப்புரையாற்றியிருந்தனர்.
"பிரபாகரன் என்பது பெயர்ச்சொல் அல்ல
அது வினைச்சொல்"
இன்று உலகெங்கும் தமிழர்கள் போராடுவதன் பின்னணி:
இத்தனை வருடப்போராட்டத்தை நடத்துவதற்கு பிரபாகரன் மேடைகளில் வந்து முழங்கியதும் இல்லை,
வாக்குறுதிகளை அள்ளி வீசியதுமில்லை,
ஆடு,மாடு,கோழி,பணம் என்று ஐந்தாண்டுக்கு ஒரு முறை பிச்சை எடுத்ததும் இல்லை.
பிரபாகரன் என்கிற ஒருபிம்பம் தான்,கண்ணுக்கு தெரியாத நிழல் தான் ஆட்சி செய்தது,
பிரபாகரன் என்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே தலைமை படை நடத்தும்.
தமிழகத்திலும் சரி,புலம்பெயர் நாடுகளிலும் சரி,தேசியத்தலைவரை பார்க்காமல்,அவரை ஒருநாள்
பார்ப்போம் என்பதற்காகவே எந்த வகையான போராட்டத்துக்கும் தயாராக ஆயிரக்கணக்கான
இளைஞர்களை ஆக்கி வைத்திருப்பது அந்தப்பெயர் மட்டும் தான்.
அது போதும்.அது வழிநடத்தும்,அது படை நடத்தும்.
No comments:
Post a Comment