இப்படி ஒரு கூட்டம் எல்லா கல்லூரிகளிலும் நிச்சயம் இருந்திருக்கும்..
1.நூலகத்தின் நுழைவு வாயிலில் கால் கடுக்க காத்திருப்பாரகள் . ஆனால் கல்லூரி காலம் முழுக்க ஓர் நாள் கூட நூலகத்தின் உள்ளே நுழைந்திருக்க மாட்டார்கள்.
2.வகுப்பிற்கு ஓர் நாள் கூட நேரத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். உணவகத்திற்கு ஓர் நாள் கூட வராமல் இருந்திருக்க மாட்டார்கள்
3.முதல் வருடத்தில் மட்டுமே பையில் பேனாவும் , கையில் கையேடுமாய் கல்லூரிக்கு வந்திருப்பார்கள். அதன் பின் கடன் வாங்கிய பேனாவில் தான் தேர்வைக் கூட எழுதியிருப்பார்கள்.
4.பெண்களிடம் பேசியிருக்கவே மாட்டார்கள். பெண்களைப் பற்றி பேசாமல் இருந்திருக்கவே மாட்டார்கள்.
5.அமைதியான பெண்ணாய் பார்த்து அவள் அசந்த நேரம் டிபன் பாக்ஸில் இருக்கும் உணவை காலி செய்திருப்பார்கள்.
6.மதிய நேர வகுப்பில் மிகுந்த சோர்வான நேரத்தில் நேரம் கழியவில்லை என்று ,ஒரு படிப்பாளியை எழுப்பி வாத்தியாரிடம் கேள்வி கேட்க சொல்லியிருப்பார்கள்.
7.நான்கு பேர் படுக்கும் கட்டிலில், பத்து பேரை உறங்கச் சொன்னால் கூட ஒற்றுமையாய் உறங்கியிருப்பார்கள் பொய்யை கூட ஒன்றாய் ஒரே மாதிரி சொல்லியிருப்பார்கள்.
8.எதற்குமே அசையாதவர்கள், ஏதோ ஒரு பெண்ணின் பேச்சால் சண்டை போட்டிருப்பார்கள்.
9.படிக்கறவனை விட்டு தள்ளியே இருப்பார்கள்.ஆனால் தேர்வின் முதல் நாள் இரவில் மட்டுமே முழு புத்தகத்தையும் படித்து தேர்ச்சி அடையும் அளவிற்கு திறமையானவர்களாய் இருப்பார்கள்.
10.பிறந்தநாள் விழா, நண்பர்கள் தினம் என அத்தனையும் வகுப்பில் கொண்டாடி ஒட்டு மொத்த வகுப்பிற்கும் தண்டனை வாங்கி தந்திருப்பார்கள்.
11.விடுதி உணவகத்தில் சாப்பாடு சரியில்லை அதனால் வேலை நிறுத்தம் செய்கிறோம் என்று சும்மா நின்ற பேருந்து கண்ணாடியை உடைத்திருப்பர்கள்.அதற்கும் நஷ்ட ஈடு என்று, வகுப்பில் இருக்கும் எல்லோரிடமும் கல்லூரி நிர்வாகம் ஒரு தொகையை கறந்திருக்கும்.
# அழகிய நினைவுகள் தொடர்ந்து மலரும்.

No comments:
Post a Comment