இதுவரை
ஆறுமுறை டெல்லி காங்கிரஸை மிரட்டினார் கருணாநிதி. ஆனால், அத்தனை தடவையும்
அதனை வாபஸ் வாங்கினார். இப்போதும் அப்படி நடக்காது என்பதற்கு எந்த
உத்தரவாதமும் இல்லை என்றாலும், ஈழத் தமிழர் விவகாரத்தை வைத்து கருணாநிதி
ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதையே உணர்த்துகிறது ராஜினாமா அறிவிப்பு.
'இலங்கையில் நடந்தது இனப்படு கொலை’ என்பதை ஐ.நா.வில் அமெரிக்கா
கொண்டுவரும் தீர்மானத் தில் இந்தியா சேர்க்க வேண்டும் என்பதுதான்
கருணாநிதியின் கோரிக்கை. இதனை அவர் ஒரு மாதத்துக்கு முன்பு சொல்லி இருக்க
லாம். இந்தியாவுக்கும் அமெரிக்கா வுக்கும் அதிகாரிகள் மட்டத்திலான
பேச்சுவார்த்தையாவது நடக்க நேரம் இருந்திருக்கும். 21-ம் தேதி
ஓட்டெடுப்புக்கு வரவேண்டிய தீர்மானத்துக்கு 18-ம் தேதி இறுதி வடிவம்
கொடுப்பார்கள். 17-ம் தேதி செக் வைக்கிறார் கருணாநிதி.
ஐ.நா.விதிமுறைகளை அறிந்துகொள்வதற்கான அவகாசம் இல்லாமல், டெல்லியில்
இருந்து ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகிய மூவரும் 18-ம்
தேதி சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார் கள்.'அமெரிக்கத்
தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும், இதே
வாசகங்கள் கொண்ட தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் வைத்து நிறைவேற்ற
வேண்டும்’ என்று கோரிக்கைகளில் ஒன்றைக் கூட்டி னார். 'பதிலை நாங்கள் சொல்ல
முடியாது. சோனியாவிடம் கேட்டு விட்டுச் சொல்கிறோம்’ என்று மூவரும்
சென்றார்கள். மறுநாள் காலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவதாக
கருணாநிதி அறிவித்தார்.
மூவர் குழு, டெல்லி போனது மட்டுமே உண்மை.
அவர்கள் சோனியா, மன்மோகனிடம் இதுபற்றிப் பேசினார்களா என்றே தெரிய வராத
நிலையில், 'நாங்கள் விலகுகிறோம்’ என்று கருணாநிதி அறிவித்திருப்பது
'காங்கிரஸ் என்ன முடிவு எடுத்தாலும் அவர்களோடு இருக்க வேண்டாம்’ என்று
முடிவெடுத்ததையே காட்டுகிறது.
எப்படியாவது காங்கிரஸ் கட்சியைத்
தலைமுழுகத் திட்டமிட்டு, அதற்கான ஒரு காரணத்தைத் தேடி, அது ஈழப் பிரச்னையாக
அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். நாடு முழுவதும் எழுந்துள்ள
காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவம்தான் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம்
என்று சொல்லப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் பேராசிரியர்
அன்பழகனுடன் பேசிய கருணாநிதி, ''காங்கிரஸோடு சேர்ந்து இனி ஓட்டுக் கேட்கப்
போக முடியாது'' என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப்
பிறகே, மத்திய ஆட்சிக்கான நிர்பந்தங்களையும் தொடங்கி இருக்கிறார். ஆனால்,
அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் காங்கிரஸ் மட்டும்தான். இன்று அவரே கழற்றிவிட்ட
நிலையில், அவரோடு எந்தக் கட்சி கூட்டணியில் இணையத் தயாராக இருக்கும்
என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.
காங்கிரஸ், தி.மு.க. ஆகிய
இரண்டு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் இணைந்தால் நல்லது என்று விஜயகாந்த்
சில மாதங்களுக்கு முன்பு யோசிக்கத் தொடங்கினார். ஆனால், இன்று அவர்களே
பிரிந்த நிலையில் சேர ஆர்வம் காட்ட மாட்டார். காங்கிரஸுக்கு இணையாக
மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ்
கூட்டணியில் இருந்து விலகினாலும், கருணாநிதி மீதான கோபம் குறையவும்
வாய்ப்பு இல்லை. தனக்கு லாபம் வர வாய்ப்பு இல்லாத ஒரு முடிவையே கருணாநிதி
இப்போது எடுத்துள்ளார்.
இந்த நெருக்கடியைச் சமாளிப்பதில்தான் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலமே அடங்கி உள்ளது!
- முகுந்த்
இதுவரை
ஆறுமுறை டெல்லி காங்கிரஸை மிரட்டினார் கருணாநிதி. ஆனால், அத்தனை தடவையும்
அதனை வாபஸ் வாங்கினார். இப்போதும் அப்படி நடக்காது என்பதற்கு எந்த
உத்தரவாதமும் இல்லை என்றாலும், ஈழத் தமிழர் விவகாரத்தை வைத்து கருணாநிதி
ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதையே உணர்த்துகிறது ராஜினாமா அறிவிப்பு.
'இலங்கையில் நடந்தது இனப்படு கொலை’ என்பதை ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத் தில் இந்தியா சேர்க்க வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் கோரிக்கை. இதனை அவர் ஒரு மாதத்துக்கு முன்பு சொல்லி இருக்க லாம். இந்தியாவுக்கும் அமெரிக்கா வுக்கும் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையாவது நடக்க நேரம் இருந்திருக்கும். 21-ம் தேதி ஓட்டெடுப்புக்கு வரவேண்டிய தீர்மானத்துக்கு 18-ம் தேதி இறுதி வடிவம் கொடுப்பார்கள். 17-ம் தேதி செக் வைக்கிறார் கருணாநிதி.
ஐ.நா.விதிமுறைகளை அறிந்துகொள்வதற்கான அவகாசம் இல்லாமல், டெல்லியில் இருந்து ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகிய மூவரும் 18-ம் தேதி சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார் கள்.'அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும், இதே வாசகங்கள் கொண்ட தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் வைத்து நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரிக்கைகளில் ஒன்றைக் கூட்டி னார். 'பதிலை நாங்கள் சொல்ல முடியாது. சோனியாவிடம் கேட்டு விட்டுச் சொல்கிறோம்’ என்று மூவரும் சென்றார்கள். மறுநாள் காலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவதாக கருணாநிதி அறிவித்தார்.
மூவர் குழு, டெல்லி போனது மட்டுமே உண்மை. அவர்கள் சோனியா, மன்மோகனிடம் இதுபற்றிப் பேசினார்களா என்றே தெரிய வராத நிலையில், 'நாங்கள் விலகுகிறோம்’ என்று கருணாநிதி அறிவித்திருப்பது 'காங்கிரஸ் என்ன முடிவு எடுத்தாலும் அவர்களோடு இருக்க வேண்டாம்’ என்று முடிவெடுத்ததையே காட்டுகிறது.
எப்படியாவது காங்கிரஸ் கட்சியைத் தலைமுழுகத் திட்டமிட்டு, அதற்கான ஒரு காரணத்தைத் தேடி, அது ஈழப் பிரச்னையாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். நாடு முழுவதும் எழுந்துள்ள காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவம்தான் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் பேராசிரியர் அன்பழகனுடன் பேசிய கருணாநிதி, ''காங்கிரஸோடு சேர்ந்து இனி ஓட்டுக் கேட்கப் போக முடியாது'' என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகே, மத்திய ஆட்சிக்கான நிர்பந்தங்களையும் தொடங்கி இருக்கிறார். ஆனால், அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் காங்கிரஸ் மட்டும்தான். இன்று அவரே கழற்றிவிட்ட நிலையில், அவரோடு எந்தக் கட்சி கூட்டணியில் இணையத் தயாராக இருக்கும் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.
காங்கிரஸ், தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் இணைந்தால் நல்லது என்று விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு யோசிக்கத் தொடங்கினார். ஆனால், இன்று அவர்களே பிரிந்த நிலையில் சேர ஆர்வம் காட்ட மாட்டார். காங்கிரஸுக்கு இணையாக மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினாலும், கருணாநிதி மீதான கோபம் குறையவும் வாய்ப்பு இல்லை. தனக்கு லாபம் வர வாய்ப்பு இல்லாத ஒரு முடிவையே கருணாநிதி இப்போது எடுத்துள்ளார்.

![@[578401832173683:274:தமிழ் என் தாய்மொழி]
THE POWER OF STUDENTS :- Must Share !!!!
தலைக்கு 500ரூபா யாரும்
கொடுக்கவில்லை.. ....!!!!!
பிரியாணி பொட்டலம்
கொடுக்கவில்லை.. ....!!!!!
கோட்டார் ( மது ) பாட்டில்
கொடுக்கவில்லை ......!!!!!
வேன் பஸ் என எதுவும் அனுப்பி ஆள்
பிடிக்கவில்லை ......!!!!!
கோடி கோடியா நிதி திரட்டவில்லை கடை கடையா வசூல்
செய்யவில்லை ......!!!!!
மாவட்டம் வட்டம் கிளை என்று யாரும்
உத்தரவு போடவில்லை ......!!!!!
அப்பரம் எப்படி இந்த போராட்டத்துக்கு
மட்டும் இவ்வளவு கூட்டம் கூடுது.....????
தமிழ் நாட்டு கழகங்கள்
புலம்பல்....... ....!!!!!](https://m.ak.fbcdn.net/sphotos-a.ak/hphotos-ak-prn1/s480x480/602008_508486742543436_1786250871_n.jpg)

![என் இளைய தலைமுறைகளே..
மனம் வலிக்கிறது
சில தங்கை, தம்பிகள் சினிமா மோகத்தில் இன்னும் ஆழ்ந்து இருப்பது மனம் வலிக்க செய்கிறது..
இத்தனை மாணவ செல்வங்கள் பட்டினி போராட்டம் நடத்தியும் நடிர்களின் இன்னும் ஒரு நாய் கூட பெரிதாக முன் வரவல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்...
இன்னும் எங்கள் சுப்பர் ஸ்டார் என்று சொல்லி கொண்டு திரியும் மாணவ செல்வங்களே, உங்கள் ரஜினிகாந்த் அளித்த பேட்டியை பாருங்கள்....
[மும்பை குண்டுவெடிப்பில ் தொடர்புடையே நடிகர் சஞ்சய் தத்திற்கு, இன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டதற ்கு ரஜினியின் கருத்து:
எனது அன்பான அருமையான நண்பருக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்ததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன் . அவரை மன்னித்து விடுதலை செய்ய பலர் போராடுவது நம்பிக்கையூட்டு கிறது. அவர் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக செலவழிக்க கடவுளிடம் நான் பிராத்திக்கிறேன ்...]
கடந்த பல நாட்களாக மாணவருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வில்லை, நேற்று வந்த தீர்ப்புக்காக வருத்தபடுகிறார் ..
எந்த விதத்தில் நியாயம்..
தமிழ் பேரை சொல்லி பிழைக்கும் நரிக்கூட்டத்தை கண்டு கொள்ளுங்கள்..
உங்களை படம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை அவர்களின் மீது உள்ள மதிப்பை களைந்து விட்டு, நம் தமிழ் மொழி மீதும், நம் தமிழர் மீதும் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடதிர்கள ்..](https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-prn1/s480x480/524914_363142763792048_603411413_n.jpg)