ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைகல்லூரி மாணவர்கள் 11 பேர் தங்களது உண்ணா நிலை பட்டினி போராட்டத்தை துவங்கிவிட்டார்கள் !!!
வேலூரில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள மாணவர்களிடம் Internal மார்க்கெல்லாம்
போடனும் ஒன்றும் கிடைக்காது என்று காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்..
மருத்துவமனையில் உள்ள போராட்ட மாணவர்கள், போராட்டத்தை தொடர்ந்து
நடத்துகிறார்கள், இதற்கிடையில் அவர்களை பார்க்க சென்ற யாரையும் காவல்துறை
அனுமதிக்கவில்லை.
தமிழக மாணவர்களின் போராட்டத்தை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விசயம்
லயோலா மாணவர்கள் மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். காவல் துறையிடமிருந்து கல்லூரி நிர்வாகத்திற்கு நிர்பந்தம்.
அரியலூர் அரசுக்கல்லூரி, தஞ்சை அரசுக்கல்லூரி, சென்னை கே.ஆர்.எம்.எம்.,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., திருச்சு தூய வளனார் கல்லூரி உள்பட தமிழகம்
முழுவதும் மாணவர்கள் போராட்டம். திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தொடர் உண்ணாவிரதம். லயோலா மாணவர்களின்
கோரிக்கைகளை பின்பற்றி போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது
ஈழ விடுதலைக்கான தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டம்.
இன்று பின்வரும் இடங்களில் மாணவர் போராட்டங்கள்
ஆக்ரோஷத்துடன் ஆரம்பம் ஆகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன..!
மாணவர் சக்தி மகத்தான சக்தி!
இதோ பின்வரும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் வெடித்துவிட்டன.
அவையாவன :
(1) மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்
(2) காரைக்குடி அழகப்பா கல்லூரி..
(3) காரைக்குடி ஆனந்தா கல்லூரி..
(4) சென்னை லயோலா கல்லூரி 2000 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்கி விட்டனர்.
(5) கும்பகோணக் கல்லூரி ஒன்றில் இருந்து 2000 மாணவர்கள் போராட்டத்தை தொடங்கி விட்டனர்
(6) திருச்சி தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் காலவரையற்ற உண்ணா நிலை போராட்டம்
(7) பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் (எசனை,கடகால்) மாணவர்கள் சாலைமறியலை தொடங்கியுள்ளனர்.
(8) கும்பகோணம் பூம்புகார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
(9) பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி மாணவர்களும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment