Monday, November 19, 2012

மொகஞ்சதாரோ!

உலகில் முதல் முதலில் உயிர்கள் எங்கே தோன்றியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மனிதனை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவன் எப்படி உருவானான்? எங்கே உருவானான்? என்கிற ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது "உலகின் நடுமையப் பகுதியும் நில நடுக்கோட்டிற்கு [Equator] அருகில் இருந்திருக்கும் பகுதியில் முதலில் சூடு குறைந்து இறுகி வெட்ப தட்ப விளைவுக்கு ஏற்ப உயிர் தோன்றக் கூடிய இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும், குமரிக்கண்டத்தில் முதன்முதலாக உயிர்கள் தோன்றியிருந்த போது ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கிந்தியத் தீவுகள் உட்பட இந்நிலப்பரப்பு பகுதிகள் ஒன்றாக இணைந்திருந்தன என்றும், உயிர்கள் தோன்றி பலஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் இப்பெரும்நிலப்பரப்பு சிதைந்து போயிருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.

கி.மு.10.000-முதல் கி.மு.5.000-வரையில் மனித இனங்கள் தோன்றி பல்வேறு இடங்களில் பரவலாயின என்றும் தெரிவித்த போது ஆதாரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை.1922-இல் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து 400-கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் அருகே தொல்லியலாளர்களால் [Archaeologists] மொகஞ்சதாரோ நகரம் கண்டிபிடிக்கப்பட்ட போது வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

மொகஞ்சதாரோ என்றால் அழிந்து போனவர்களின் நகரம் [Mound of the dead] என்ற பொருள் கொண்டது. மொகஞ்சதாரோ தார்ப்பாலைவனத்திற்கு [Tar desert] மேற்கிலும், பலுச்சிஸ்தானத்திற்குக் கிழக்கிலும், பஞ்சாப் மாநிலத்திற்கு தெற்கிலும், கட்சு வளைகுடாவிற்கு வடக்கிலும் உள்ள நிலப்பரப்பு. இதன் மொத்த அளவு 53.000-மைல்கள். இதில் இராஜஸ்தானிலுள்ள கலிபங்கன் [Kalibangan] என்னும் இடத்திலும், குஜராத்திலுள்ள லோதால் [Lothal] என்னும் இடத்திலும் வாழ்ந்த பண்டைய மக்கள் திராவிடர்கள் என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.

தொல்லியலாளர்களால் [Archaeologists] திராவிடர்களின் வரலாற்றை 5- வகையாகப் பிரித்திருக்கின்றனர்.

1.கோண்டுவானாக் காலம் அல்லது முந்து இலெமுரியாக் காலம்.

2.இலெமுரியாக் காலம்.

3.குமரிநாட்டுக் காலம்.

4.மொகஞ்சதாரோ காலம்.

5.நாவலந்தேய காலம்.

இதில் குமரிக்கண்ட காலம் கி.மு.10.000-முதல் கி.மு.5000-வரை என்கின்றனர்.இந்தியத் துணைக்கண்டத்துடன் [Indian Sub Continent] இணைந்திருந்த சிந்து ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்த திராவிடர்களின் வாழ்க்கை முறைகள் குறித்தும் இன்றும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இவர்கள் [திராவிடர்கள்] மண்பாண்டங்கள், வெள்ளி, தங்க நகைகள், எடை பார்க்கும் தராசு- எடைக்கற்கள், நிலங்களில் பயிர் செய்தும் வந்திருக்கின்றனர். சிந்துவெளி எழுத்துக்களாக மீன், கட்டங்கள், நாய், கோழி, வாத்து, வண்டு, மனித உருவம் போன்ற வடிவங்களை கொண்டிருக்கிறது.

சிந்திவெளி எழுத்துக்களை ஆராய்ந்தவர்கள் 234-எழுத்துக் குறியீடுகள் உள்ளதாக சொல்கின்றனர். நகரங்கள், கிராமங்களாக இருந்த மொகஞ்சதாரோ நகர வடிவமைப்புகளும் சீரான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. சிந்து ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகவும், நில அதிர்ச்சி போன்ற இயற்கை பேரழிவுகளாலும் மொகஞ்சதாரோ நாகரிகம் பலமுறை அழிவுற்று அடுக்கு அடுக்கான மண்மேடுகளால் மூடப்பட்டு மறைந்தன என்றும் சுமார் 400-நகரங்கள் இப்படி அழிந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

40-ஹெக்டர் நிலப்பரப்பளவில் பரவியுள்ள மொகஞ்சதாரோ இடத்தில் இதுவரை மூன்றில் ஒரு பாகம் மட்டுமே தொல்லியலாளர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பண்டைய பாபிலோன் எகிப்திய நாகரிகங்களை விட மிகவும் பழமையானதும், மேலானதுமாகும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மொகஞ்சதாரோ ஹரப்பாவில் வாழ்ந்த பண்டைய மக்கள் மனித இனத்தில் மிகவும் நாகரிகத் தேர்ச்சி பெறறு மனித நல மேம்பாட்டைக் கொண்டதாக இருக்கிறதாக குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள் யூனெஸ்கோ [UNESCO], பாகிஸ்தான் இணைந்து மொகஞ்சதாரோவில் இருக்கும் இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத இடங்களை பாதுகாக்கவும், தொடர்ச்சியான ஆராய்ச்சியில் ஈடுபடவும் தீவிர ஆர்வங்காட்டி வருகின்றன.

மொகஞ்சதாரோ பகுதியை அழியாமல் பாதுகாக்க 16-இலட்ச டாலர் செலவில் திட்டங்கள் தீட்டிப்பட்டு தொடர்ச்சியாக அப்பகுதிகளில் ஆய்வுகள் இன்னமும் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் பரவி இருந்த திராவிடர்களின் நிலப்பரப்புகள் ஆரியர்களின் வரவுக்கு பிறகு எதிர்கொண்ட இனப்போராட்டங்களும், கலாச்சார மாற்றங்களும், ஆரியர்களுக்கு எதிராக போராடிய திராவிடர்கள் கொல்லப்படுப்படும், வன்முறைகளிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தெற்கு பகுதியை நோக்கி இடப்பெயர்வு கொண்டதும், இந்து மதம் உருவாக்கத்திற்கு பின் திராவிடர்கள் மீது திணிக்கப்பட்ட மதச்சடங்குகள் காலப்போக்கில் திராவிடர்களை ஆரியர்களிடம் அடிமைகளாக மாறிப் போக காரணங்களாக அமைந்தன என்பது வரை வரலாறுகள் நீண்டது.

ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடக்கட்டும். திராவிடர்களின் பழம்பெருமைகளை ஒருபுறம் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் ஆரியர்களின் தந்திரமிக்க அடிமை சாஸனத்திற்கு சலாம் போடுகிறோம். எடுத்துச் சொன்னால் சலித்துக் கொள்கிறோம். ஆனால், பழங்காலத் திராவிடர்கள் மனித நேயம் மிக்கவர்களாக, வீரத்தில் சிறந்தவர்களாக, இனப்பற்று மிக்கவர்களாக, ஒற்றுமையாக இருந்தவர்களாக ஆதாரங்களுடன் வரலாறுகளில் பதிவு செய்துக் கொண்டிருக்கிறது மொகஞ்சதாரோ திராவிடர்களின் உணர்வுகள். அவை இன்றைய திராவிடர்களுக்கு முற்றிலும் இல்லாத தகுதியாகும்.

No comments:

Post a Comment