Communist என்பது ஒரு இயல்பு. மனிதர்களின் இயல்பான ஒரு உணர்வு. சாலையில் நடந்து செல்லும் ஒருவர் அங்கு ஒருவன் மற்றொருவனை அடித்து உதைத்துக
்கொண்டிருப்பதை
கண்டால், பாதிக்கப்பட்டவனின் சார்பில் பாதிப்பவனை தடுத்து நிறுத்த
முன்வருவாரே அதன் பெயர் தான் கம்யூனிசம். அந்த உணர்வு தான் கம்யூனிசத்தின்
சாரம். அந்த உணர்வை பரந்துபட்ட தன்மைகளுடன், பின்னணி, விளைவுகள் குறித்த
பார்வையோடு உலகளாவிய நிகழ்வுகளுடன் பொருத்தி அதற்கான தீர்வுகளை
சிந்தித்தால் அதன் பெயர்தான் கம்யூனிசம்.
இருக்கும் பலவிதமான அரசியல் கட்சிகளைப் போல ஆட்சிக்கு வருவதை மட்டுமல்ல யாருக்கான அரசாக இயங்குவது என்பதையே முதன்மைப் படுத்துவதால் இருக்கும் கட்சிகளிடையே கம்யூனிசம் மாறுபாடுடையது. மக்களின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் தேடி மருளவைக்கும் சொற்களால் மலட்டுப்பரப்புரை செய்யும் கொள்கைகளிடையே “உலகை வியாக்கியானம் செய்வதல்ல அதை மாற்றியமைப்பதே நோக்கம்“ என்று அறிவித்துச் செயல்படுவதால் கம்யூனிசம் தனித்தன்மையுடையது. மனித இனத்தின் பண்டைய வரலாறு முதல் இன்றைய கலாச்சார வீக்கங்கள் ஈறாக அனைத்தையும் அறிவியல் மேடையில் உரசிப்பார்த்து இனங்காண்பதால் பொருளியல் கொள்கை எனும் தூற்றல்களில் நனையாமல் நிற்பது. மனிதர்களின் முடை நாற்றமெடுக்கும் சிந்தனை ஊறல்களை, அது பல்லூழிகளாக தொடர்ந்திருந்தாலும், சுகந்த மணம் தருவதாக நினைத்துக்கொண்டிருந்தாலும், அவைகளை அகற்றி இறுக்கம் தளர்த்தும் வழிமுறைகளுடன் இருப்பதால்; விமர்சனம் சுயவிமர்சனம் எனும் தளத்தில் நிற்பதால் முதலாளித்துவத்திற்கு மட்டும் எதிரானதாக இதை குறுக்கிவிட முடியாது.
கம்யூனிசம் ஒரு மதமல்ல, இங்கு முன்னாசிகளோ முக்கிய தெய்வங்களோ இல்லை. மார்க்சும், ஏங்கெல்சும் படைத்தவற்றை லெனினும், மாவோவும் மேம்படுத்தினர். எனவே இங்கு வேதமும் இல்லை. உழைப்பே இங்கு விதி, போராட்டமே மகிழ்ச்சி.

No comments:
Post a Comment