துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' பேசுகிறார் பிரபாகரன்
****************************** ******************
நாளாந்த வாழ்வின் கடமைகளும், கவலைகளும், சம்பந்தமில்லா மனிதர்களும்
நீதிக்கான வேட்கையிலிருந்து நம்மை தணிக்கின்றன. இச்சூழல்வினைக்கு நானும்
விதி விலக்கல்ல. அதிகாலை எழுந்து நடக்கும்போது இருக்கிற உணர்வெழுச்சியும்
வேகமும் அந்தியாகும் போது இருப்பதில்லை. ஆயினும் ஒருசில நிகழ்வுகள் மட்டும்
நம்மை நிம்மதியாக இருக்க முடியாமற் செய்யும், எண்ணும்போதெல்லாம் கண்ணியச்
சீற்றம் கிளர்த்தும். கடந்த சுமார் ஐம்பது நாட்களாய் என்னை கனன்றுகொண்டே
இருத்தி வைக்கும் நிகழ்வு மே, 14, 15, 16 நாட்களில் முல்லைத்தீவு பகுதியில்
பாதுகாப்புத்தேடி ராணுவக் கட்டுப் பாட்டு பகுதிகளுக்குள் வந்த பல்லாயிரக்
கணக்கான தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவம் ஆடைகள் களைந்து, நிர்வாணமாய் கைகளை
உயர்த்திக்கொண்டு வரச்செய்த கொடுமை.
சரியோ, தவறோ... எந்த
வரலாற்று- பண்பாட்டுக் காரணங் களாலோ தெரியவில்லை... பெண்களை பொத்திப் பாது
காத்து வளர்க்கும் சாதி இந்த தமிழ்ச்சாதி. உயிரினும் மானம் பெரிதெனக் கருதி
வாழ்ந்த சாதி. தாய்மையை தெய்வீகமாய் போற்றிய பண்பாடுடைத்த சாதி. அப்படியான
தொரு மக்கள் இனத்தின் அன்னையர்களும், நங்கை நல்லாரும், மாணவ வயதிலான
பிள்ளைகளும்கூட அக்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பதை நினைக்கும்
போதெல்லாம் இரத்தம் சூடாகிறது. இயேசுபிரான் சொல்லித் தந்த "பகைவனுக்கும்
நேசம் தா...', "வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தையும் காட்டு'
போன்ற உன்னத பாடங்கள் மறந்து "பழிதீர்' என்ற வெறியே பிறக்கிறது. இந்த
உணர்வுகள் சரியா தவறா என்றும் தெரியவில்லை.
******************************
நாளாந்த வாழ்வின் கடமைகளும், கவலைகளும், சம்பந்தமில்லா மனிதர்களும் நீதிக்கான வேட்கையிலிருந்து நம்மை தணிக்கின்றன. இச்சூழல்வினைக்கு நானும் விதி விலக்கல்ல. அதிகாலை எழுந்து நடக்கும்போது இருக்கிற உணர்வெழுச்சியும் வேகமும் அந்தியாகும் போது இருப்பதில்லை. ஆயினும் ஒருசில நிகழ்வுகள் மட்டும் நம்மை நிம்மதியாக இருக்க முடியாமற் செய்யும், எண்ணும்போதெல்லாம் கண்ணியச் சீற்றம் கிளர்த்தும். கடந்த சுமார் ஐம்பது நாட்களாய் என்னை கனன்றுகொண்டே இருத்தி வைக்கும் நிகழ்வு மே, 14, 15, 16 நாட்களில் முல்லைத்தீவு பகுதியில் பாதுகாப்புத்தேடி ராணுவக் கட்டுப் பாட்டு பகுதிகளுக்குள் வந்த பல்லாயிரக் கணக்கான தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவம் ஆடைகள் களைந்து, நிர்வாணமாய் கைகளை உயர்த்திக்கொண்டு வரச்செய்த கொடுமை.
சரியோ, தவறோ... எந்த வரலாற்று- பண்பாட்டுக் காரணங் களாலோ தெரியவில்லை... பெண்களை பொத்திப் பாது காத்து வளர்க்கும் சாதி இந்த தமிழ்ச்சாதி. உயிரினும் மானம் பெரிதெனக் கருதி வாழ்ந்த சாதி. தாய்மையை தெய்வீகமாய் போற்றிய பண்பாடுடைத்த சாதி. அப்படியான தொரு மக்கள் இனத்தின் அன்னையர்களும், நங்கை நல்லாரும், மாணவ வயதிலான பிள்ளைகளும்கூட அக்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பதை நினைக்கும் போதெல்லாம் இரத்தம் சூடாகிறது. இயேசுபிரான் சொல்லித் தந்த "பகைவனுக்கும் நேசம் தா...', "வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தையும் காட்டு' போன்ற உன்னத பாடங்கள் மறந்து "பழிதீர்' என்ற வெறியே பிறக்கிறது. இந்த உணர்வுகள் சரியா தவறா என்றும் தெரியவில்லை.

No comments:
Post a Comment