Sunday, December 9, 2012

FDI idiots

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !!!!

இந்தியா முழுவதும் சுமார் 15 கோடி மக்கள் சில்லறை வணிக துறையின் மூலம் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

15 கோடி மக்களுக்குப் பதிலாக சில ஆயிரம் பேரை கூலி உழைப்பாளிகளாக வைத்துக் கொள்வதுதான் வால்மார்ட் மக்களுக்கு வழங்கும் ஒரே வேலைவாய்ப்பாக இருக்கும். வால்மார்ட்டில் வேலை செய்வது என்பதன் பொருள் குறைந்த ஊதியம், ஓவர் டைம் கொடுக்காமல் அதிக நேரம் வேலை வாங்கப்படுதல், போதுமான மருத்துவ வசதிகள் மறுப்பு என்று பலவிதமான சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதே ஆகும்.

‘வால்மார்ட்டில் குறைந்த விலை அல்வா கிடைக்கலாம், ஆனால் வால்மார்ட் அழித்து விடப் போகும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள், என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதது’ என்பது கார்பொரேட் சில்லறை வணிகத்தை அனுமதித்த பல நாடுகளின் அனுபவம்.

வால்மார்ட் சில்லறை வணிக குடும்பங்களை மட்டுமல்ல, அவர்களுக்கு சப்ளை செய்யும் குடிசைத் தொழில்கள், சிறு, நடுத்தர விவசாயிகள், அத்தனை பேரையும் சேர்த்தே அழிக்கிறது. தூக்கி எறியப்படும் இந்த மக்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த வாழ்க்கையை இழப்பதோடு மலிவான கூலியுழைப்பு சந்தையின் ரிசர்வ் சக்திகளாக அலைய வேண்டியிருக்கும்.

இந்த அழிவை தடுத்த நிறுத்தா விட்டால் அதன் சமூக, அரசியல் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். வால்மார்ட்டை ஆதரிக்கும் அறிவாளிகள் தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் பிராயச்சித்தமாக வால்மார்ட்டை எதிர்க்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்ளலாம். செய்வார்களா?

No comments:

Post a Comment