Monday, December 10, 2012

where is ellam actually

"தமிழீழம் எங்கே இருக்கின்றது அதன் எல்லைகள் எங்கு உள்ளன" தேசிய தலைவரின் நெத்தியடியான பதில்

ஆரம்பத்தில் "புதிய தமிழ் புலிகள்" என்ற பெயரோடு செயற்பட்ட புலிகள் அமைப்பு 1976 மே 5 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர் மாற்றபட்டது. இதனையடுத்து விடுதலைப்புலிகள் தமது கொள்கைகள் மற்றும் நோக்கம் குறித்து தெளிவு படுத்துவதற்காக ஒரு ஊடகவியாலாளர் சந்திப்பு ஒன்றினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த சந்திப்பில் வெளிநாட்டு ஊடகவியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஊடகவியாளர் சந்திப்பில் அப்போது விடுதலைபுலிகளின் சிரேஸ்ட தளபதிகளாக இருந்த மாத்தையா, கேணல் கிட்டு மற்றும் தேசிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த ஊடகவியாளர் சந்திப்பில் வெள்ளைக் கார நிருபர் ஒருவர் எதிர்க் கேள்வி போட்டு தலைவரை மடக்கினார். 'நீங்கள் தமிழ் ஈழம், தமிழ் ஈழம் என்று சொல்லிப் பேசுகிறீர்கள். இந்தத் தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது. இதன் எல்லைகள் என்ன?'

தலைவர் ஒரு கணம் திகைத்து நின்றார். சிறிது அவகாசம் எடுத்து, தன்னை மீட்டுக்கொண்டு அவர் இப்படிப் பதில்அளித்தார். 'இலங்கைத் தீவின் வரைபடத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் கையிலே எடுத்துக்கொள்ளுங்கள். இலங்கையில் எந்தெந்தப் பகுதிகளில் குண்டுகள் விழுகின்றனவோ, எந்தெந்தப் பகுதியில் பீரங்கி வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ, எந்தெந்த இடங்களில் தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தினரின் வன்முறைக்கு ஆளாகி அவலப்படுகிறார்களோ, அந்தந்த இடங்களை எல்லாம் வரைபடத்தில் வண்ணம் தீட்டுங்கள். முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்தப் பகுதிதான் தமிழ் ஈழம். அதுதான் எங்கள் எல்லைகள்!' 
 
No comments:

Post a Comment