மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
****************************** ******
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, ""என்னையும் விஞ்சிய போராளி'' என வியந்து
பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந் தான். அவன் யாரெனத்
தெரியுமா உங்க ளுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க்
அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல்
சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!''.
உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று
அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி
சரத் பொன்சேகா தலைமையில் ""யாழ்தேவி'' எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில்
யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர்
எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும்
சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே
புறமுதுகிட்டு ஓடச் செய்தவன். அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை
சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள்
அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப்
போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு ராணுவத்தினர் யாழ்தேவி
சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.
எத்தனையோ ராணுவ வரலாறுகளை படித்திருக் கிறேன். எண்ணிலா தளபதியர்களின்
போர்க்கள சாகசங் களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும்
எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத் தின் கொக்குத் தொடுவாய்
கிராமம் தந்த இத்தளபதிதான்.
இரவு பகலென களப்பணியில் நின்ற
அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை
காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து
அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ்
மருத்துவர்கள் வந்திருந்து பெருமை யுடன் அவனை சிங்கப்பூரில்
பராமரித்தார்கள். சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம்
வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற் குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம்
சிங்களத் தளபதியர்கள் முழு ராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி
நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து
கழுத்தறுத்துவிட்டார்களோ... என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ்
தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கில
மும் கலந்து உடைக்கிறார். ""பயப்படாதீர்கள் பால்ராஜ்... "வதிரையன் பாக்ஸ்'
சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போ தேனும் பார்க்கிற பாக்கியம்
கிட்ட வேண்டு மென்று ஆசித்த ராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள்
ராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?'' என்று
அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து
உண்மையான ராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.
என்றேனும்
ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது
உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன்
பால்ராஜ் நடத்திய "வதிரையன் பாக்ஸ்' சண்டையை "ஹாலிவுட்' திரைப்பட
தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின்
ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத் தமிழ்ச் சாதியில்
பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாக வோ, யூதனாகவோ பிறந்திருந்தால்
இன்று அவன் உலகம் போற்றும் போர்க் கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
****************************** ******
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, ""என்னையும் விஞ்சிய போராளி'' என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந் தான். அவன் யாரெனத் தெரியுமா உங்க ளுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!''.
******************************
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, ""என்னையும் விஞ்சிய போராளி'' என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந் தான். அவன் யாரெனத் தெரியுமா உங்க ளுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!''.
உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று
அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி
சரத் பொன்சேகா தலைமையில் ""யாழ்தேவி'' எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில்
யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர்
எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும்
சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே
புறமுதுகிட்டு ஓடச் செய்தவன். அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை
சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள்
அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப்
போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு ராணுவத்தினர் யாழ்தேவி
சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.
எத்தனையோ ராணுவ வரலாறுகளை படித்திருக் கிறேன். எண்ணிலா தளபதியர்களின் போர்க்கள சாகசங் களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும் எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத் தின் கொக்குத் தொடுவாய் கிராமம் தந்த இத்தளபதிதான்.
இரவு பகலென களப்பணியில் நின்ற அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ் மருத்துவர்கள் வந்திருந்து பெருமை யுடன் அவனை சிங்கப்பூரில் பராமரித்தார்கள். சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம் வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற் குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம் சிங்களத் தளபதியர்கள் முழு ராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்களோ... என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ் தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கில மும் கலந்து உடைக்கிறார். ""பயப்படாதீர்கள் பால்ராஜ்... "வதிரையன் பாக்ஸ்' சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போ தேனும் பார்க்கிற பாக்கியம் கிட்ட வேண்டு மென்று ஆசித்த ராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள் ராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?'' என்று அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உண்மையான ராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.
என்றேனும் ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன் பால்ராஜ் நடத்திய "வதிரையன் பாக்ஸ்' சண்டையை "ஹாலிவுட்' திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத் தமிழ்ச் சாதியில் பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாக வோ, யூதனாகவோ பிறந்திருந்தால் இன்று அவன் உலகம் போற்றும் போர்க் கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.

No comments:
Post a Comment