நானோ
தொழில்நுட்பம் எனும் துறை உருவாவதற்கான விதை போட்டவர், ரிச்சர்ட்
ஃபெய்ன்மான். யூதக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே மத நம்பிக்கை
இல்லாதவராக வளர்க்கப்பட்டார்.
பேசும் திறன் இவருக்கு மூன்று
வயது வரை கிட்டாது இருந்ததால் இவருடன் தொடர்ந்து இவரின் தந்தை பேசிக்கொண்டே
இருப்பார். வீட்டில் இருந்தே இவர் கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை கற்றுத்
தேர்ந்தார். கொலும்பியா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பம் போட்டால் போ வெளியே
என நிராகரித்து விட்டார்கள்.
எம்ஐடியில் சேர்ந்தார். இயற்பியலின்
அத்தனை துறையிலும் சேர்ந்து பாடம் கற்றார். வரலாறு, ஆங்கிலம் இரண்டும்
மனிதரை பாடாய் படுத்தின. இரண்டிலும் கஷ்டப்பட்டு பாஸ் ஆனார். முனைவர்
பட்டத்துக்காக எடுத்துக்கொண்ட தலைப்பின் விளைவாக மின்னியக்கவிசையியலின்
முக்கிய தத்துவமான வீலர்-ஃபெய்ன்மான் உட்கவர் தத்துவம் உருவானது.
மனிதர் ஏகத்துக்கும் குறும்புக்காரர். அணுகுண்டை உருவாக்கிய மன்ஹட்டன்
திட்டத்தில் பணியாற்றியபொழுது சில குறிப்புகளை சங்கேத மொழியில் அங்கங்கே
விட்டு சகாக்களை முக்கியமான விஷயங்களை கண்டுபிடிக்க வைப்பார். இதனால்
பலபேர் உளவாளி யாரோ நுழைந்துவிட்டதாக பீதியாகி எல்லாம் இருக்கிறார்கள்.
அணுகுண்டு வெடித்ததும் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு உள்ளானார். இத்தனை
உயிர்கள் இறந்துவிட்டதே என்கிற கவலை. தான் வேலை பார்த்த பல்கலைகழகம்
வேலைக்கு வர சொன்னபொழுது அவர் போகாததால் வேலையும் போனது. அதற்குப் பிறகு
அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார்.
குவாண்டம்
மின்னியக்கவிசையியலின் மீது அவரின் ஆர்வம் மீண்டும் பொங்கியது. ஃபெய்ன்மான்
வரைபடங்களை உருவாக்கினார்; அவற்றை இன்டக்ரல் பாதை தொகுப்பின் கொண்டு
வரையறுத்தார். அவற்றைக்கொண்டு இணை அணு துகள்களின் இடையே நடக்கும்
உள்வினைகள் பற்றி துல்லியமாக விளக்கினார். இதற்காக இயற்பியலுக்கான நோபல்
பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அப்பொழுது வயது 38 !
ஹீலியம் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாகுநிலை இல்லாத சூப்பர்
திரவத்தன்மையை ஏன் கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார். பாதை இன்டக்ரல்களை
துல்லியமாக கணிக்கும் தத்துவத்தை இவர் உருவாக்கி தர அது செயற்கைக்கோள்
செலுத்துதலை மிக துல்லியமானதாக ஆக்கிற்று. 1959 இல் "There's plenty of
room in the bottom "எனும் இவரின் புகழ்பெற்ற உரை நானோ
தொழில்நுட்பத்துக்கான கதவுகளை திறந்து விட்டது.
அறிவியலின்
மகத்தான பிள்ளைகளில் ஒருவராக தன்னைக் கருதிக்கொண்ட அவர் மதம் சார்ந்தோ,
இனம் சார்ந்தோ தன்னை குறிப்பதை எதிர்த்தார். நான் மனிதன் என்றார். இன்று
(பிப்.15) அவரின் நினைவு நாள்.
- பூ.கொ.சரவணன்
நானோ
தொழில்நுட்பம் எனும் துறை உருவாவதற்கான விதை போட்டவர், ரிச்சர்ட்
ஃபெய்ன்மான். யூதக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே மத நம்பிக்கை
இல்லாதவராக வளர்க்கப்பட்டார்.
பேசும் திறன் இவருக்கு மூன்று வயது வரை கிட்டாது இருந்ததால் இவருடன் தொடர்ந்து இவரின் தந்தை பேசிக்கொண்டே இருப்பார். வீட்டில் இருந்தே இவர் கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை கற்றுத் தேர்ந்தார். கொலும்பியா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பம் போட்டால் போ வெளியே என நிராகரித்து விட்டார்கள்.
எம்ஐடியில் சேர்ந்தார். இயற்பியலின் அத்தனை துறையிலும் சேர்ந்து பாடம் கற்றார். வரலாறு, ஆங்கிலம் இரண்டும் மனிதரை பாடாய் படுத்தின. இரண்டிலும் கஷ்டப்பட்டு பாஸ் ஆனார். முனைவர் பட்டத்துக்காக எடுத்துக்கொண்ட தலைப்பின் விளைவாக மின்னியக்கவிசையியலின் முக்கிய தத்துவமான வீலர்-ஃபெய்ன்மான் உட்கவர் தத்துவம் உருவானது.
மனிதர் ஏகத்துக்கும் குறும்புக்காரர். அணுகுண்டை உருவாக்கிய மன்ஹட்டன் திட்டத்தில் பணியாற்றியபொழுது சில குறிப்புகளை சங்கேத மொழியில் அங்கங்கே விட்டு சகாக்களை முக்கியமான விஷயங்களை கண்டுபிடிக்க வைப்பார். இதனால் பலபேர் உளவாளி யாரோ நுழைந்துவிட்டதாக பீதியாகி எல்லாம் இருக்கிறார்கள். அணுகுண்டு வெடித்ததும் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு உள்ளானார். இத்தனை உயிர்கள் இறந்துவிட்டதே என்கிற கவலை. தான் வேலை பார்த்த பல்கலைகழகம் வேலைக்கு வர சொன்னபொழுது அவர் போகாததால் வேலையும் போனது. அதற்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார்.
குவாண்டம் மின்னியக்கவிசையியலின் மீது அவரின் ஆர்வம் மீண்டும் பொங்கியது. ஃபெய்ன்மான் வரைபடங்களை உருவாக்கினார்; அவற்றை இன்டக்ரல் பாதை தொகுப்பின் கொண்டு வரையறுத்தார். அவற்றைக்கொண்டு இணை அணு துகள்களின் இடையே நடக்கும் உள்வினைகள் பற்றி துல்லியமாக விளக்கினார். இதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அப்பொழுது வயது 38 !
ஹீலியம் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாகுநிலை இல்லாத சூப்பர் திரவத்தன்மையை ஏன் கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார். பாதை இன்டக்ரல்களை துல்லியமாக கணிக்கும் தத்துவத்தை இவர் உருவாக்கி தர அது செயற்கைக்கோள் செலுத்துதலை மிக துல்லியமானதாக ஆக்கிற்று. 1959 இல் "There's plenty of room in the bottom "எனும் இவரின் புகழ்பெற்ற உரை நானோ தொழில்நுட்பத்துக்கான கதவுகளை திறந்து விட்டது.
அறிவியலின் மகத்தான பிள்ளைகளில் ஒருவராக தன்னைக் கருதிக்கொண்ட அவர் மதம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ தன்னை குறிப்பதை எதிர்த்தார். நான் மனிதன் என்றார். இன்று (பிப்.15) அவரின் நினைவு நாள்.

No comments:
Post a Comment