Wednesday, February 20, 2013

உயிர் பிரியும்


உயிர் பிரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் எங்கள் போராட்டம் எப்போதும் தோற்று போக கூடாது. நான் சாகலாம் ஆனால் நாங்கள் சாக கூடாது என்பது அப்பாவின் வேத வாக்கு. என்னை காக்க வேண்றும் என்று என் அப்பா நினைத்திருந்தால், என்னை காத்திருப்பார். ஆனால், மண் காக்க வேண்றும் என்ற போராட்டத்தில் என்னை போல் பல பிள்ளைகளை அப்பா கண்டவர். அவர்கள் சாவுக்கு முன் என் சாவு ஒன்றும் பெரிதல்ல. ஒரே ஒரு கவலை தான், நான் போராடிச் சாகவில்லை. எதிரியின் கையில் பிடிபட்டு இறந்தேன் என்பது தான். எனக்குத் தெரியும் மாவீரர்கள் போராடி மடிந்த மண்ணை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்று. திரும்பத் திரும்பச் சொல்கிறேன், நான் சாகலாம் நாங்கள் சாக கூடாது என்னும் அப்பாவின் வேத வாக்குக்கு, நீங்கள் உயிர் கொடுப்பீர்கள் என நான் நம்புகிறேன். எங்கு வாழ்ந்தாலும் நாங்கள் தமிழனாய் வாழ வேண்டும்.

No comments:

Post a Comment