கொமன்வெல்த் மாநாடு கருகிப் போகும் கனவா?
************************** *********************
கனடாவைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தை விவாதிக்க ஏப்ரல் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை, உடனடியாக அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. பிரித்தானியா இதில் வெளிப்படையாக செல்வாக்கு எதையும் செலுத்தாது போனாலும், கனடாவின் நிலைப்பாட்டிலேயே அதுவும் இருப்பதாகத் தோன்றுகிறது.இன்னொரு பக்கத்தில், கொமன்வெல்த் உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடம் இருந்து பறிக்கப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் அதை நடத்துவதற்கு தான் தயார் என்று மொறிசியஸ் கூறுகிறது. இந்தநிலையில் தான், நிலைமை மோசமடைவதைத் தடுக்கின்ற அவசர முயற்சியில் இறங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். அவரது லண்டன் பயணத்துக்கு இது தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால், பிரித்தானிய அரசுடன் அவர் பேசும் திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் இம்மாதம் முதலாம் திகதி வரை கொழும்பில் தான் இருந்தார். அவர் நாடு திரும்பிய ஒரு வாரத்துக்குள் பிரித்தானியாவுக்கு ஓடிப் போக வேண்டிய தேவை இல்லை. ஏற்கனவே ஜெனிவா கூட்டத்தொடர் அரசாங்கத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கொமன்வெல்த் விவகாரமும் சேர்ந்து கொண்டிருப்பது, அரசாங்கத்தின் தலைவலியை இரட்டிப்பாக்கி விட்டுள்ளது.
இனி,
நவம்பர் மாதம் இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு மெல்ல மெல்ல கேள்விக்குறியாகி வருகிறது. கனடா எழுப்பிய போர்க்குரல், இந்த மாநாட்டைக் கொழும்பில் நடத்துவதா இல்லையா என்று ஆராயும் கட்டத்தை நோக்கி நகர்த்திருப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு ஆபத்தான கட்டம் என்றே சொல்லலாம். ஏனென்றால், கடந்த 2011ம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் போது, அடுத்த மாநாட்டை கொழும்பில் நடத்தலாம் என்று இயல்பானதொரு சூழலில் முடிவு எடுக்கப்படவில்லை. அப்போதே கனடா எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி விட்டது. ஆனாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முன்னேற்றத்தை காட்ட வேண்டும், இல்லையேல, மாநாட்டைப் புறக்கணிப்பேன் என்ற எச்சரிக்கையோடு தான், பேர்த்தில் இருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர்.
2009இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில், ரினிட்டாட் அன் டுபாகோவில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் போது, எடுக்கப்பட்ட முடிவை பேர்த்தில் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. அதுமட்டுமன்றி கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமைக்காக, அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகருடன் அம்பாந்தோட்டை கடுமையாகப் போட்டியிட்டுத் தோற்றுப் போனது. இதற்காக கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொட்டி பிரசாரங்கள் செய்யப்பட்ட போதும், அம்பாந்தோட்டையில் கொமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் கனவு கருகிப் போனது தான் மிச்சம். இதுபோன்றதொரு நிலை இம்முறை கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கும் வந்து விடுமோ என்ற கலக்கம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது.
ஏனென்றால்,
கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திடீரென லண்டனுக்கு மேற்கொண்ட பயணம், அரசாங்கத்தின் இந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு எதிராக, கனடா போர்க்கொடி தூக்கத் தொடங்கியதுமே, ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன லண்டனுக்குச் சென்று விட்டார். அங்கு அவர், தொடர்ச்சியாக கொமன்வெல்த் செயலகத்துடன் பேச்சுக்களை நடத்தியதுடன், உறுப்பு நாடுகள் மத்தியில் இலங்கைக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். இருந்தபோதிலும், வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், இலங்கை விவகாரத்தை – குறிப்பாக, மாநாட்டை கொழும்பில் நடத்துவதா என்பதை விவாதிக்கும் விடயம், நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை.
கனடாவின் கடும் அழுத்தம் காரணமாகவும், பிரித்தானியா போன்ற நாடுகளின் பின்புல ஆதரவு காரணமாகவும் இலங்கையால் எதுவும் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. கொமன்வெல்த் செயலராக இருக்கும் கமலேஷ் சர்மா ஒரு முன்னாள் இந்திய இராஜதந்திரி. அவர் இலங்கைக்கு சார்பாக நகர்வுகளை மேற்கொண்டாலும் கூட, கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் எடுக்கப்படும் முடிவை அவரால் மாற்ற முடியாது. அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே தான், இந்த விவகாரம் கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படுவதை இலங்கை கடுமையாக எதிர்த்தது.
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், கனடா, ஜமைக்கா, மாலைதீவு, சியராலியொன், தன்சானியா, ட்ரினிடாட் அன் டுபாகோ, வனாடு ஆகிய நாடுகள் உள்ளன. இதில் மாலைதீவு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏனைய நாடுகள் தான் இந்த விடயம் குறித்து ஆலோசிக்கப் போகின்றன. இதில் சீனா, ரஸ்யா பாணியில், இலங்கைக்கு உறுதியான – கண்மூடித்தனமான ஆதரவை வழங்கக் கூடிய நாடுகள் என்று எதுவும் இல்லை . ஆனாலும் அவுஸ்ரேலியா தனது நலன் கருதியும், பங்களாதேஷ் சார்க் அமைப்பு நாடு என்ற வகையிலும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கலாம்.
ஏனைய நாடுகளின் நிலை கேள்விக்குறிதான்.
எனவே தான், அவசரமாக லண்டனுக்குப் பறந்து போனார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். அவர் கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மாவைச் சந்தித்து, இலங்கை விவகாரத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்த்தற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அது மட்டுமன்றி, பேர்த்தில் 2011இல் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இது முரணானது என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும், கனடா தொடர்ந்து கொமன்வெல்த் செயலகத்துக்கு அழுத்தம் கொடுத்தபடியே தான் உள்ளது.
கனடாவைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தை விவாதிக்க ஏப்ரல் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை, உடனடியாக அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. பிரித்தானியா இதில் வெளிப்படையாக செல்வாக்கு எதையும் செலுத்தாது போனாலும், கனடாவின் நிலைப்பாட்டிலேயே அதுவும் இருப்பதாகத் தோன்றுகிறது. இன்னொரு பக்கத்தில், கொமன்வெல்த் உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடம் இருந்து பறிக்கப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் அதை நடத்துவதற்கு தான் தயார் என்று மொறிசியஸ் கூறுகிறது.
இந்தநிலையில் தான், நிலைமை மோசமடைவதைத் தடுக்கின்ற அவசர முயற்சியில் இறங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். அவரது லண்டன் பயணத்துக்கு இது தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால், பிரித்தானிய அரசுடன் அவர் பேசும் திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் இம்மாதம் முதலாம் திகதி வரை கொழும்பில் தான் இருந்தார். அவர் நாடு திரும்பிய ஒரு வாரத்துக்குள் பிரித்தானியாவுக்கு ஓடிப் போக வேண்டிய தேவை இல்லை. அதேவேளை, கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மாவும் கூட, கடந்த ஞாயிறு அன்று கொழும்பு வந்திருந்து மகிந்த உட்பட முக்கிய பல பிரமுகர்களுடன் பேச்சு ந்டத்துவதற்கு திட்டமிட்டிருந்த சூழ்நிலையில் அவரைச் சந்திக்க அவசரப்பட்டு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் லண்டன் சென்றது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது.
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியிலேயே அவர் இறங்கியதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், அவரது இந்த முயற்சி எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. அதேவேளை, கனடாவை அடுத்து, இலங்கைக்கு சிக்கலாக உள்ள மற்றொரு நாடு பிரித்தானியா. கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்பதா இல்லையா என்று பிரித்தானியா இன்னமும் முடிவெடுக்காத நிலையிலேயே உள்ளது. பிரித்தானியா புறக்கணித்தால், அது மிகப் பெரிய விவகாரமாகும்.
ஏனென்றால்,
பிரித்தானியாவின் கொலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளின் கூட்டமைப்புத் தான் இந்த கொமன்வெல்த். இதனால் தான், கொமன்வெல்த் மாநாட்டை பிரித்தானியாவின் முடிக்குரிய ஒருவர், பெரும்பாலும் மகாராணி அல்லது அவரால் முடியாது போனால், இளவரசர் சாள்ஸ் தொடக்கி வைப்பது வழக்கம். இந்தநிலையில், கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை பிரித்தானிய அரசாங்கம் எடுக்குமேயானால், அதில் மகாராணி அல்லது அவரது பரம்பரையைச் சேர்ந்த பிரதிநிதி பங்கற்பாரா என்ற கேள்வியும் உள்ளது.
பிரித்தானியா புறக்கணித்தால், மகாராணியும் பங்கேற்கமாட்டார், அவரை பிரித்தானிய அரசாங்கம் தடுத்து விடும் என்று சிலர் தப்புக்கணக்குப் போடுகின்றனர். இந்த விடயத்தில் பிரித்தானிய மகாராணியின் முடிவின் மீது, அந்த நாட்டு அரசினால் செல்வாக்குச் செலுத்த முடியாது. கடந்த மாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான ஒரு விவாதம் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், இதனைத் தெளிவாக கூறியிருந்தார். மகாராணியின் பயணத்தை அரண்மனையும், கொமன்வெலத் செயலகமும் தான் முடிவு செய்யும் என்றும், அதில் பிரித்தானிய அரசாங்கத்தினால் தலையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பில், நடக்கும் மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னர், கொமன்வெல்த் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய தடையைத் தாண்ட வேண்டும். இந்தத் தடையைத் தாண்டினால் தான், கொமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்த முடியும். ஏற்கனவே ஜெனிவா கூட்டத்தொடர் அரசாங்கத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கொமன்வெல்த் விவகாரமும் சேர்ந்து கொண்டிருப்பது, அரசாங்கத்தின் தலைவலியை இரட்டிப்பாக்கி விட்டுள்ளது.
தொல்காப்பியன் இன்போ தமிழ்
**************************

No comments:
Post a Comment